LIOC வெளியிட்டுள்ள செய்தி

2 years ago
(531 views)
aivarree.com

இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் ( LIOC) இலங்கையில் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக LIOC நிறுவனம் அறிவித்திருந்தது

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இந்த மாத இறுதிக்குள் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக LIOC நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

LIOCக்கு தற்போது 213 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது