இலங்கை மின்சார சபையை (CEB) மறுசீரமைக்கப் பல நிறுவனங்கள் உதவி வழங்கியுள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து நேற்றைய தினம் பல தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவை இந்த செயல்முறைக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதற்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும் எனவும் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.