ATM அட்டை மோசடி – மக்கள் அவதானம்

2 years ago
Sri Lanka
(387 views)
aivarree.com

குருநாகல் நகரில் தானியக்க பண வழங்கல் இயந்திர அட்டை ( ATM CARD ) மோசடி தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைதாகினார்.

சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் 6 ATM அட்டைகளுடன் குருநாகலையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களை ஏமாற்றி அவர்களின் பிண் இலக்கங்களைப் பெற்று ATM இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.