81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

2 years ago
Sri Lanka
(377 views)
aivarree.com

இலங்கையின் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள பல்லுயிர்ச் செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும் 2022 ஆம் ஆண்டின் நாடு தழுவிய ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனிதர்களால் அவற்றின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் சேதம் காரணமாக பறவைகள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன .