7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு

2 years ago
Sri Lanka
(508 views)
aivarree.com

லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி,

  • ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.218.
  • உள்ளூர் சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் ரூ.9 குறைப்பு – புதிய விலை ரூ.155
  • ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 6 ரூபா குறைப்பு – புதிய விலை 129 ரூபா
  • சிவப்பு பருப்பு 1 கிலோகிராம் 19 ரூபா குறைப்பு – புதிய விலை 339 ரூபா
  • ஒரு கிலோகிராம் கோதுமை மா 15 ரூபா குறைப்பு – புதிய விலை 230 ரூபா
  • உள்ளூர் வெள்ளை அரிசி 1 கிலோகிராம் 7 ரூபா குறைப்பு, புதிய விலை 188 ரூபா
  • காய்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 75 ரூபா குறைப்பு – புதிய விலை ரூ.1,500.