நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரிப் பலன்கள் சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரிபார்க்கும் பொருட்டு, மாவட்டச் செயலகத்தில் உள்ள கள உத்தியோகத்தர்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
3.7 மில்லியன் பேர் பயன்பெற விண்ணப்பித்திருந்தாலும், இதுவரை 65,000 பேர் மட்டுமே கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கோ அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கோ சென்று மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.