எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்து வருகிற நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த மாதம் இலங்கையில் 12.5 கிலோ எரிவாயு நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.