சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களின் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 அழகுசாதனப் பொருட்கள் இலங்கை சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“இந்த அழகுசாதனப் பொருட்கள் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் தயாரிப்புகளை அழிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் சில நல்ல தரமான தயாரிப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது, ”என்று அவர் கூறினார்.
எனவே குறித்த பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு இலங்கையின் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்படுபவை உள்ளூர் சந்தையில் ஏலம் விடப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.