இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேயிடமிருந்து 50 பேருந்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் பெற்றுக்கொண்டார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பெறப்பட்டுள்ள பேருந்துகள்இ நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையினால் பயன்படுத்தப்படவுள்ளது.