2 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு – மெஸிடோனிய பிரஜை கைது

2 years ago
Sri Lanka
(394 views)
aivarree.com

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் மெஸிடோனிய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதானது இன்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 350 கிராம் கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 54 வயதுடைய சந்தேக நபர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை என சுங்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் அதிகாரிகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.