160 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்கத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிமான நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று காலை UL-141 என்ற விமானம் மூலம் இந்தியாவின் மும்பைக்குத் தங்கத்தைக் கடத்த முற்படுகையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து தங்க பிஸ்கட்டுகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.