11 சிறுமிகள் துஷ்பிரயோகம் – சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரின் கணவர் கைது

2 years ago
Sri Lanka
(427 views)
aivarree.com

இரத்தினபுரி, றக்வானையில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

றக்வானை பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 11 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முறைப்பாடு செய்திருந்தது.

இதன்படி சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரின் 60 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் 18 வயதை நிறைவடைந்ததையடுத்து . சிறுவர் இல்ல பொறுப்பாளரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.