100 ரூபாவாக குறையவுள்ள பாண்

2 years ago
Sri Lanka
(552 views)
aivarree.com

பாண் விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள வெதுப்பக தொழிற்துறையை கட்டியெழுப்புவதென்றால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தற்போது பாண் றாத்தல் ஒன்று 150 ரூபா முதல் 180 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதனை 100 ரூபா வரையில் குறைப்பதே தங்களின் இலக்கு.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படுமே தவிர இனி அதிகரிக்கப்பட மாட்டாது.

இதற்கு அரசாங்கத்திடம் இருந்தும் நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.