சிலாபம்-புத்தளம் வீதியில் பத்துலுஓயாவில் ரயில்வே பாலத்தில் எரிபொருள் பவுஸர் ஒன்று மோதி
நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய எரிபொருள் பவுசரின் சாரதி மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக விதியிலிருந்து 100 மீற்றர் தூரம் வரை எரிபொருள் பவுஸர் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.