அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (மார்ச் 01) எதிர்ப்பை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க தலைவர்களின் கூற்றுப்படி மின்சாரம், நீர், பெட்ரோலியம், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் வங்கி ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த அடையாள வேலை நிறுத்தத்த
போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
புதிய வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவம், ஆசிரியர் மற்றும் அஞ்சல் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கறுப்பு பட்டி அணிந்து அல்லது கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளித்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியம், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக ஊழியர்கள் காலை 7 மணி முதல் 24 மணித்தியால பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்களின் பேச்சாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
தமது தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றியத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.