ஹபராதுவவில் உள்ள சுற்றுலா விடுதியில் விருந்தினர்களிடமிருந்து 06 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் விடுதியின் கணக்காளர் ஆகியோரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விருந்தினரின் பாதுகாப்பு அலுமாரிக்கு ( Locker) வழங்கப்பட்ட ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி இப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.