வேட்புமனு தாக்கல் நிறைவு | தேர்தல் திகதி மாலையில்

2 years ago
Sri Lanka
(476 views)
aivarree.com

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தன

வேட்பாளர்கள் சமர்ப்பித்த வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகளை பிற்பகல் 1.30 மணி வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.