மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்வோரிம் பாதுகாப்புக்காக புதிய காப்புறுதி முறையை இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணிமனை தெரிவித்துள்ளது.
பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிமார் இந்த காப்பீட்டை வழங்க வேண்டும்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக, அந்த பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்ய இந்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாகச் செல்லும் பெண்கள் தகுந்த காப்பீட்டைத் தேர்வு செய்யலாம்.