வியட்னாம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 173, பிரிவு 1 க்கு இணங்க, சொத்து திருடிய குற்றச்சாட்டின் பேரில், ஹனோய் நீதிமன்றில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, 42 வயதான அருண ருக்ஷான் ராஜபக்ஷ, மார்ச் 1, 2020 அன்று ஹோ சி மின் நகரில் உள்ள டான் சோன் நாட் சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாமிற்குள் நுழைந்தார்.
அவர் வேலை தேடுவதற்காக நாடு முழுவதும் பல இடங்களுக்குச் சென்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, அவர் ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் உடமைகளை திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிந்தார்.
சம்பவ தினமன்று இரவு 8:00 மணியளவில், லை தாய் டோ வார்டில் உள்ள ஹேங் முவோய் வீதியில் உள்ள அன்னம் உணவகத்திற்குள் நுழைந்த பிறகு, உள்ளே 13 மில்லியன் VND (545 USD) கொண்ட கருப்பு தோல் கைப்பையைக் கண்டார்.
ராஜபக்ஷ பையை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
திருடப்பட்டதை அறிந்ததும், உணவகத்தின் ஊழியரான பையின் உரிமையாளர் நுயென் டியூ லின் உடனடியாக உதவிக்காக கூச்சலிட்டார்.
பின்னர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் குறித்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டு லை தாய் டு வார்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
லின் தனது பையை பெற்றுக்கொண்டு, உள்ளூர் போலீசாரிடம் இந்த வழக்கை விதிமுறைகளின்படி கையாளும்படி கேட்டுக்கொண்டார்.