இலங்கையின் விமான நிலையங்களில் பயணிகள் தங்க ஆபரணங்களை அணிந்துவரும் விடயத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது
விமானத்தில் தங்கப் பொருட்களை பலர் நாட்டிற்குள் கொண்டு வந்து மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
ஒருவருக்கு அதிகபட்சம் கொண்டுவரக்கூடிய தங்கத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் பகுதி பகுதியாக தங்கத்தை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான தங்கப் பொருட்கள் இந்த நாட்டிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
இதனைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.