பூட்டப்பட்டிருந்த வாகன திருத்தல் நிலையமொன்றில் தீ விபத்து

2 years ago
Sri Lanka
(426 views)
aivarree.com

தாவடி வன்னிய சிங்கம் பகுதியில் வாகன திருத்தல் நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

வாகன திருத்தல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

வாகன திருத்தல் நிலையத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.