வவுனியா பூவரசங்குளத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

2 years ago
Sri Lanka
(526 views)
aivarree.com

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09.03.2023) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.