வளி மாசு – மக்கள் அவதானம்

2 years ago
Sri Lanka
(419 views)
aivarree.com

யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இலங்கையின் வளித்தர சுட்டெண் அடிப்படையில் இன்று வளிமண்டலம் அதிகமாக மாசடைந்துள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது. .

அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி யாழ்ப்பாணத்தில் துகள்களின் அளவு 126, குருநாகலில் 103, கண்டியில் 111 மற்றும் ஹம்பாந்தோட்டையில் 106 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

101 தொடக்கம் 150 வரையான வளித்தர சுட்டெண்ணை கொண்டுள்ள பிரதேசங்கள் சிறுவர்கள் ,முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்துமிக்கதாகும்.

அங்கு வசிக்கின்ற பாதிக்கப்பட கூடிய தரப்பினர் முககவசம் அணிந்துகொள்வது பாதுகாப்பானது என வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.