பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டார் வசந்த முதலிகே பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் அரச எதிர்ப்பு போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
150 நாட்களுக்கு மேலாக தடுப்பிலும், விளக்கமறியலிலும் இருந்த அவருக்கு இன்று கொழும்பு பிரதான நீதிமன்றம் பிணை வழங்கியது.
அவரை விடுவிக்க வலியுறுத்தி சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.