லெபனானில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவரின் உறவினர்களை அடையாளம் காண இலங்கை வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
காலமானவரின் தகவல்கள் பின்வருமாறு:
பெயர்: திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி
தே.அ.அ.இல. : 797631574V
கடவுச்சீட்டு இல.: N5758240
இலங்கைப் பிரஜையான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி கடந்த 2023.01.01 அன்று லெபனானில் உயிரிழந்ததாக லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளிநாட்டமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு அறிவித்துள்ளது.
இந் நிலையில் ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தியின் இறுதிக்கிரியைகளைச் செய்வதற்கான உதவிகளை பெறுவதற்காக, இறந்தவரின் நெருங்கிய அல்லது அவரைத் தெரிந்தவர்களை அடையாளம் காண இலங்கை வெளிநாட்டு அமைச்சு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
அவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரகாரம் அவரின் முகவரி 117, யாய 6, வராவௌ, குருணாகல் மற்றும் 247/3, ஹபரகட, ஹோமாகம எனும் முகவரியும் குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொலைபேசி இலக்கம்: 011238836 / 0117711163 / 0112323015, மின்னஞ்சல்: consularShmfa.gov.lk அல்லது கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, 2ம் மாடி, செலிங்கோ கட்டிடம், கொழும்பு 01 எனும் முகவரயூடாக இவ்வமைச்சினை தொடர்பு கொள்ளலாம்.