லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (05) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுகிறது.
சற்று முன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார்
பின்வரும் விலை திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன .
12.5 கிலோ சிலிண்டர் ரூ.334 அதிகரித்துள்ளது (புதிய விலை – ரூ. 4,743)
5 கிலோ சிலிண்டர் ரூ. 134 அதிகரித்துள்ளது. (புதிய விலை – ரூ. 1,904)
2.3 கிலோ சிலிண்டர் ரூ. 61 அதிகரித்துள்ளது (புதிய விலை – ரூ. 883)