ரூபாவின் பெறுமதி அதிகரிப்பும் – எரிபொருள் விலை குறைவும்

2 years ago
Sri Lanka
(585 views)
aivarree.com

அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கையின் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் எதிர்வரும் வாரங்களில் எரிபொருட்களில் விலைகள் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமின்றி ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு பண வீக்கத்தை குறைக்கும்.

எரி‍பொருள் விலை குறைப்பினால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைவடையும்.

அதனால் பண வீக்கம் மேலும் குறைவடையும்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் காணப்பட்டது.

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம், புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்ற அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை அதிகரிப்பு காரணமாக ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.