அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில் இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் 311.62 முதல் 311.82 ரூபாவகவும் விற்பனை விகிதம் 328.90 முதல் 328.86 ரூபாவாகும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கொள்வனவு வீதம் 376.59 ரூபாவகவும், விற்பனை வீதம் 399.08 ரூபாவகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.