இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
இலங்கை அமைச்சர் அலி சப்ரியுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்ட ஜெய்சங்கர் இலங்கையின் அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் அதை மீட்டெடுப்பதற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் .
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து கடிதம் ஒன்றை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.