யுக்ரைன் நாட்டின் போர் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்க இங்கிலாந்து சேலஞ்சர் 2 யுத்த தாங்கிகளை அனுப்ப உள்ளது.
அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் சனிக்கிழமை தொலைபேசி ஊடாக பேசினார்.
அதன் போது அவர் யுத்த உபகரணங்கள் மற்றும் மேலதிக பீரங்கி கட்டமைப்புகளை அனுப்புவதாக உறுதியளித்தார் என, “நம்பர் 10” கூறியுள்ளது.
இங்கிலாந்தின் இந்த முடிவு “போர்க்களத்தில் எங்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மற்ற பங்காளிகளுக்கும் சரியான சமிக்ஞையை அனுப்பும்” என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.