யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு சீ.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

2 years ago
Sri Lanka
(452 views)
aivarree.com

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலைப் பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதவரளித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டுமென யாழ்.பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் அப்பகுதி மக்களிடம் கோரியுள்ளது.

அத்துடன் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து கடைகளையும் அடைத்து கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொண்டது

தேசிய சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல எதிர்ப்பு ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு வரை கண்டன ஊர்வலம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த போராட்டத்துக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.