மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன.
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் வலயப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த பாடசாலைகளின் தரம் 9,10 மற்றும் 11 ஆகியவற்றின் தவணைப் பரீட்சைகள் இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பாடசாலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.