மெஸ்ஸிக்கு மீண்டும் விருது

2 years ago
SPORTS
(453 views)
aivarree.com

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த “தி பெஸ்ட்” கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் கரீம் பென்சிமா மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து பயிற்சியாளருக்கான விருதை உலக சாம்பியன் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி வென்றார்.

இதேவேளை, ஸ்பெயினின் அலெக்ஸியா புடேஜாஸ், இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை தொடர்ச்சியாக .இந்த விருதை மெஸ்சி வெல்வது இது 2வது முறையாகும்.

அதன்படி, உலகின் பல்வேறு கால்பந்து விருது வழங்கும் விழாக்களில் 10 முறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்சி பெற்றார்.