முட்டையை விலை அதிகரித்து விற்கும் வர்த்தகர்களுக்கு அபராதம்

2 years ago
Sri Lanka
(426 views)
aivarree.com

முட்டைகளை நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு 100,000 ரூபா முதல் 500,000 ரூபாய் வரையிலும்இ கம்பனிகளாக பதிவு செய்யப்பட்டிருந்தால் 1 மில்லியன் ரூபாய் முதல் 5 மில்லியன் ரூபா வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயித்து தற்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.