உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகல்ல வீதியின் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று வயதுக் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பயணித்த முச்சக்கர வண்டி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
எனினும் அங்குக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மீமுரே பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.