மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் க்சீ ஜின்பிங்

2 years ago
World
(589 views)
aivarree.com

க்சீ ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக் காலப் பகுதிக்குச் சீனாவின் ஜனாதிபதியாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார்.

கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 69 வயதான க்சீ ஜின்பிங்கிற்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பிரதாய ரீதியிலான தேசிய மக்கள் காங்கிரஸால் அவரின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
க்சீ ஜின்பிங் கடந்த ஒக்டோபரில் கட்சியின் பொதுச் செயலாளராக மூன்றாவது ஐந்தாண்டு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

க்சீ ஜின்பிங்கிற்கு முன்னர் சீனாவின் தலைவர்கள் இரு முறை மாத்திரமே ஜனாதிபதி பதவியில் இருந்து வந்த நிலையில் 2018 இல் அந்தக் கட்டுப்பாடு மாற்றப்பட்டது.

க்சீ ஜின்பிங்கிற்கு முன்னர் மவோ மூன்று தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.