மின்வெட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்

2 years ago
Sri Lanka
(443 views)
aivarree.com

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு மின்வெட்டினை அமுலாக்குவது தொடர்பான முக்கியத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இரவு 7 மணிக்கு மேல் மின்வெட்டு அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குமாறு பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரும் பொறியியலாளருமான ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார் .