க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நாளாந்தம் வழமைப் போல 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகின்ற போதும் 3 மணிக்குப் பின்னரே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் உற்பத்தி தொடர்பில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த மின்வெட்டு காலத்தை தொடர வேண்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாகவும்இ தற்போதைய சூழலில் மின்சார சபையிடம் அந்தளவு நிதி இல்லை எனவும்இ அவசியமான நிதி வழங்கப்பட்டால் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே தற்போது பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.