மின்னுற்பத்திக்கு மேலதிக நீரை வழங்கக்கூடிய நிலைமை இல்லை என்று மஹாவலி நீர் முகாமைச் செயலகம் அறிவித்துள்ளது.
நீர்நிலைகளில் இருந்து மேலதிக நீரை வழங்குவதன் ஊடாக, பரீட்சை காலங்களில் மின்வெட்டினை தவிர்க்க முடியும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலதிக நீர் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ந்து அவ்வாறு வழங்க முடியாது என்றும், எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாமையே இதற்கான காரணம் என்று செயலகம் அறிவித்துள்ளது.
தற்போது தேக்கத்திலுள்ள நீர், விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.