மின்சார தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 years ago
Sri Lanka
(457 views)
aivarree.com

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை அமுலாக்க இடைக்கால தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையில் மின்சார தடை அமுலாக்கப்பட மாட்டாது என்று மின்சார சபை நேற்று நீதிமன்றில் உறுதியளித்திருந்தது.

எனினும் அந்த உறுதிபாட்டை இன்றைய விசாரணையின் போது மீளப்பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.

இதனை அடுத்து மின்தடைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த மனு மீதான மேலதிக விசாரணை இம்மாதம் 7ம் திகதி இடம்பெறவுள்ளது.