மாணவர் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

2 years ago
Sri Lanka
(383 views)
aivarree.com

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே விசேட நீதிமன்ற உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு உரிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, கொழும்பில் வேறு பல நியமிக்கப்பட்ட வீதிகளை மறிப்பதிலிருந்து சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.