மாணவர்களுக்கான சீருடை துணி விநியோகம் துரிதம்

2 years ago
Sri Lanka
(458 views)
aivarree.com

2023 ஆம் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தை இலவசமாக வழங்குவதற்கான பொறுப்பை ஏற்ற சீன அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதில் 1/3 பகுதியை ஏற்கனவே வழங்கியிருந்ததுடன், மிகுதி 2/3 பகுதியையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்க பொறுப்பேற்ற அனைத்து பாடசாலை சீருடை துணிகளும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றை சீனத் தூதுவர் Qi. Zhengho ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் நேற்று (09) கல்வி அமைச்சில் கையளித்தார்.

இதற்கமைய, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழஙகுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன், அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவேனாக்களில் கல்வி கற்கின்ற பௌத பிக்குகளுக்கும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.