கொழும்பு பல்கலைக்கழக மாணவ போராட்டத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களால் மார்ச் 7 அன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த, பொலிஸாருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள், மரத்தடிகளை வைத்திருந்தார்களா என்பது தொடர்பில் அறிவதற்காகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் மரத்தடிகளுடன் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்ட படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது.
இதனையடுத்தே தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.