மத்திய மாகாணத்திலும் நாளை நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கு நாளை நடைபெறவிருந்த பரீட்சைகள் 17ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல 10, 11ம் தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.