இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி முன்னதாக 355 ரூபாவாக இருந்த வீட்டுப் பாவனைக்கான ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு 305 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
அதேவேளை 464 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் இலங்கை தொழிற்துறை மண்ணெண்ணெய் 134 ரூபாவினால் குறைக்கப்பட்டு 330 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.
மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் இவ் யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.