இ.போ.ச. பேருந்தொன்றும் ஒன்றும் தனியார் பேருந்தொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கினிகத்தேன பெரகஹமுல பகுதியில் வைத்து பிற்பகல் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்து தொடர்பில் இ.போ.ச. பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.