பெண் மாயம் – பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

2 years ago
Sri Lanka
(424 views)
aivarree.com

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் காணாமல்போன 28 வயதுடைய பெண்ணொரு வரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கேகாலை, மாவனெல்ல, உஸ்ஸாபிட்டிய பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண்ணை அடையாளம் கண்டால் பின்வரும் இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு : 035- 2247222, 071- 8591418