உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மீண்டும் தாக்கல் செய்ய நேரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பிரேரணையின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இதேவேளை, புதிய எல்லை நிர்ணய வர்த்தமானி வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய எல்லை நிர்ணய வர்த்தமானி வெளியிடப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ரத்து செய்யப்படும்.
பின்னர் புதிய வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.