ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் ஊடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த எம்.பி பீரிஸ், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது உள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.
எனவே தேர்தலை நடத்த வேண்டும்.
தற்போது தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் அரசியலமைப்பு விதிகள் அல்லது சட்டத்தின் பிரகாரம் எடுக்கப்படுவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரே தற்போது விதிமுறைகளை ஆணையிடுவதாகவும், தேர்தலை நடத்துவது குறித்த முடிவு அவரது விருப்பத்தின் பேரில் மட்டுமே எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.