எதிர்காலத்தில் பாணின் விலையை குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது பாண் றாத்தல் ஒன்று 170-180 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பாணின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பாணின் விலையை குறைப்பதற்கு அவர்களின் சங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் நாட்களில் இதற்கான அறிவித்தல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.